10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு உலக போரில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி!

முதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, இங்கிலாந்தில் 10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்விற்காக லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பழங்கால கோட்டையின் மேலேறிய இராணுவ வீரர் ஒருவர், குழல் இசையை இசைத்து அஞ்சலி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தீப்பந்தம் ஏந்தி வந்த வீரர் ஒருவர் கோட்டையைச் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீப்பந்தங்களை ஏற்றியதைத் தொடர்ந்து போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !