வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எமது செய்தி சேவையுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒதுக்கப்பட்ட நிதியில் எஞ்சிய தொகை உள்ளது.
அத்துடன் பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே போன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலே பொதுத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்படும்.
பூரணை தினத்தன்று தேர்தல் ஒன்றை நடத்த முடியாது என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அதற்கு முதல் நாள் தேர்தல் நடத்தக் கூடாதென அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
