Main Menu

மைத்­திரி கள­மி­றங்­கா­விட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்­காது போனால் எமது ஆத­ரவை கோத்­த­பாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்­மானம் எடுத்­துள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்கும் எந்த நோக்­கமும் எமக்­கில்லை என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பினர் சாந்த பண்­டார தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்த நிலைப்­பாட்டை தெரி­விக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய­குழு கூடி ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தீர்­மானம் எடுக்க வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் கட்­சியின் உறுப்­பி­னர்கள், ஆளு­நர்கள், பிர­தேச சபை உறுப்­பி­னர்கள்  என அனை­வரும் பொது இணக்­கப்­பாட்டை எட்டும் தீர்­மானம் ஒன்­றினை  முன்­னெ­டுக்க வேண்டும். ஆகவே அதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இன்­னு­மொரு தடவை கள­மி­றக்க முடியும். அதற்­கான கோரிக்­கையை நாம் முன்­வைத்தோம். ஆனால் அதற்­கான பதில் இன்­னமும் ஜனா­தி­ப­தி­யி­டத்தில் இருந்து வர­வில்லை. ஆகவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இம்­முறை கள­மி­றங்­காது போனால் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்க எந்த தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை. 

எமது மாற்று நட­வ­டிக்­கை­யாக கோத்­த­பாய  ராஜபக்ஷவை ஆத­ரிக்க முடியும். அதில் எந்த சிக்­கலும் இல்லை. அவ­ரது தேர்தல் வெற்­றிக்­காக எம்மால் செயற்­பட முடியும். அதுவே எமது தீர்­மா­ன­மாக இருக்­குமே தவிர மீண்டும் ஒரு­முறை ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டணி அமைக்கும் எந்த நிலைப்­பாடும்  எம்­மி­டத்தில் இல்லை.

இன்று நாட்டு மக்கள் அனை­வரும் மாற்று ஆட்­சி­யொன்றை கேட்டு நிற்­கின்­றனர். ஆகவே அவர்­க­ளுக்கு ஏற்ற அர­சாங்கம் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கான முயற்­சி­களை நாமும் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்னணியும் இன்று வேறு கட்சிகளாக தெரிந்தாலும் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்ட நபர்கள்.  ஆகவே மீண்டும் எம்மால் ஒன்றுசேர முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...