Main Menu

மே மாத நடுப்பகுதியில் வழமைக்கு திரும்ப தயாராகும் பெல்ஜியம்!

பெல்ஜியத்தில் எதிர்வரும் மே 4ஆம் திகதி முதல், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் சோஃபி வில்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மார்ச் நடுப்பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டினை எளிதாக்கும்.

மே மாதம் 11ஆம் திகதி முதல் வணிகங்கள் மீள திறக்கப்படும். மே 18ஆம் திகதி முதல் பாடசாலைகள் தொடங்கும்.

வைரஸின் பரவல் குறைந்துவிட்டது. ஆனால் வைரஸ் மறைந்துவிடவில்லை. மருத்துவமனைகளில் போதுமான குறைவு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் முடிவு செய்தால், கட்டுப்பாட்டினை எளிதாக்குவதற்கான பல்வேறு கட்டங்கள் இன்னும் தாமதமாகலாம்.

வணிகங்கள் மீண்டும் திறக்கும்போது சமூக தூரத்தை மதிக்க வேண்டும். ஜூன் 8ஆம் திகதி முதல் மட்டுமே உணவகங்கள் மீண்டும் திறக்கத் தொடங்கும். கஃபேக்கள் மற்றும் மதுக்கடைகளுக்கு ஒரு கால அட்டவணை அமைக்கப்படவில்லை.

பாடசாலைகளை பொறுத்தவரை, சில வகுப்புகள் மே 18ஆம் திகதி திங்கள் முதல் ஆரம்பிக்கப்படலாம்’ என கூறினார்.

மேலும் வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். அத்தோடு, குடிமக்கள் அவர்களுடன் வசிக்காத இரண்டு நபர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மக்களுக்கு இடையே பொருத்தமான இடைவெளி இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

11.5 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் 44,293பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 6,679பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,122பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

பகிரவும்...