Main Menu

மஞ்சள் மேலங்கி போராட்டம்; மிக குறைந்த அளவிலான போராளிகள்

கடந்தவார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த அளவிலான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த அளவினை விட, இந்தவாரம் மேலும் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

மஞ்சள் மேலங்கி போராட்டம் விரைவில் ஆறு மாதத்தினை தொட உள்ள நிலையில், நேற்று மே 11 ஆம் திகதி, சனிக்கிழமை Paris உள்ளிட்ட பல நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த 26 ஆவது வார ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் 18,600 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பரிசில் 1200 பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.

Paris தவிர, லியோனின்  la place Bellecour பகுதியிலும் போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு சிறிதளவான வன்முறைகளும், கைதுகளும் இடம்பெற்றதாக அறியமுடிகிறது.

Nantes நகரில் 2,200 பேர் கலந்துகொண்டதாகவும் இங்கு 12 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Toulouse இல் 1,500 பேர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...