Main Menu

பொதுத் தேர்தல் போட்டியிலிருந்து விலகிய முக்கிய முன்னாள் அமைச்சர்கள்

இலங்கையின் அரசியலில் இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

இதில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி, லொஹான் ரத்வத்த, கனக ஹேரத் ஆகியோரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஸ்வரன், வினோ நோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.பி. திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, ஷான் விஜயலால் டி சில்வா, சஹான் பிரதீப், டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன,

வாசுதேவ நாணயக்கார, ஜனக பண்டார தென்னகோன், பிரதீப் உந்துகொட, பிரியகன்ர ஜயரத்ன, நஷீர் அஹமட், சம்பத் அத்துகோரல, கெவிந்து குமாரதுங்க, நாலக கொடஹேவா, கீதா குமாரசிங்க, சமல் ராஜபக்ஷ, லக்ஷ்மன் கிரியெல்ல, சுதத் மஞ்சுள ஆகியோரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

அதேநேரம், ஐக்கியத் தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மற்றும் அந்த கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஆகியோர் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நீண்டகாலமாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

பகிரவும்...