Main Menu

பொது­ஜன பெர­முன – சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்­திலும் சாத்­தி­ய­மா­கலாம்

ஜனா­தி­பதி தேர்­தலில்  ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து செயற்றிட்­டங்­களும் முழு­மை­ய­டைந்­துள்­ளன. இறுதித் தரு­ணத்தில் சுதந்­திர கட்­சியின் தலைவர்  ஜனா­தி­பதி  நிச்­சயம் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைவார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

பத்­த­ர­முல்­லையில் உள்ள அவ­ரது  பிரத்­தி­யேக காரி­யா­ல­யத்தில் நேற்று  வியா­ழக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து   கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஸ்ரீலங்கா  சுதந்­திர கட்­சியின்  நலன் விரும்­பிகள் என்று குறிப்­பிட்டுக் கொள்­ப­வர்­க­ளி­னாலே  சுதந்­திர கட்சி பாரிய பின்­ன­டை­வினை எதிர்­வரும் காலங்­களில் அடையும்.  பரந்து பட்ட கூட்­ட­ணியின் ஊடாக   சுதந்­திர கட்­சியும், பொது­ஜன பெர­மு­னவும் இணைய வேண்டும் என்று  வெளி­மட்­டத்தில் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும்  இன்றும் சுதந்­திர கட்­சியில் ஒரு தரப்­பினர் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு விசு­வா­சி­க­ளா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள்.

பொது­ஜன பெர­மு­னவின் கொள்­கைத்­திட்­டங்கள் நவீன  தொழில்­நுட்­பங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக காணப்­ப­டு­கின்­றது. தேர்­தலில் வெற்றி பெறுவ­தற்­கான அனைத்துச் செயற்­பாடு­களும் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. நிச்­சயம் பொது­ஜன பெர­முன அமோக வெற்றி பெறும்.

சுதந்­திர கட்­சி­யினை பல­வீ­னப்­ப­டுத்தும் தரப்­பி­ன­ரது உண்மைத் தன்­மை­யினை  ஜனா­தி­ப­திக்கு  எடுத்து­ரைக்க பலமுறை முயற்­சித்தும் அவை தோல்­வி­யி­னையே தழு­வியது. இந்­நி­லைமை தொட­ரு­மாயின் மீண்டும் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆதிக்­கத்தின் கீழ் சுதந்­திரக் கட்சி செயற்­படவேண்­டிய நிலைமை தோற்றம் பெறும் இதற்கு ஜனா­தி­பதி ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக பல குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இது­வ­ரையில் எவ்­வித குற்­றங்­க­ளுக்கும் அவர் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை.  சதொச நிறு­வன முறை­கே­டுகள் தொடர்பில்  அந்­நி­று­வ­னத்தில் சேவை­யாற்­றி­ய­வர்கள் தற்போது முறைப்பாடுகளை முன் வைத்துள்ளார்கள்.

ஆகவே ஜனா திபதி பாரபட்சமின்றி தேசிய நிதி மோசடியாளர்களுக்கு எதிராக செயற்படுதல் அவசியமாகும். நிச்சயம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

பகிரவும்...