Main Menu

புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு நாடாளுமன்றில் முன்வைப்பு

புதிய அரசாங்கத்தின் முதலாவது இடைக்கால கணக்கு வாக்கு, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்காக தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரச சேவைகளை கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த இடைக்கால கணக்கு வாக்கினூடாக ஒதுக்கப்படும்.
இதற்குக் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
இதன்படி குறித்த கணக்கு வாக்கு தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.
பகிரவும்...