பிரான்ஸ்: மேலும் புதிய ஐந்து இணையவழி விற்பனை நிறுவனங்கள் மீது வழக்கு
SHEIN உள்ளிட்ட சில இணையவழி விற்பனை நிலையங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், தற்போதும் புதிதாக மேலும் ஐந்து நிறுவனங்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
தரப்படுத்தலுக்கு ஒவ்வாத பொருட்களை விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சிறுவர்களிடன் பாலியல் தேவைகளுக்கான பொருட்களை விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டு, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு A பிரிவு ஆயுதங்களையும் விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
AliExpress, Joom, eBay, Temu மற்றும் Wish ஆகிய ஐந்து நிறுவனங்கள் மீதே விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அந்நிறுவனங்களிடம் இருந்து பிரான்சுக்குள் பெறப்படும் பொதிகள் பிரிக்கப்பட்டு சோதனையிடப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...