Main Menu

நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடிப்பு – பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதில் 140 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் தாங்கியை ஏற்றிச் சென்ற பாரவூர்தி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது, தாங்கியிலிருந்த எரிபொருள் கசிந்து வெளியேறியுள்ளது.
அருகிலிருந்த மக்கள் பாரவூர்தியில் இருந்த தாங்கியிலிருந்து கசிந்த எரிபொருளைச் சேகரித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், எரிபொருள் பாரவூர்தி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில்140 பேர் இதுவரை உயிரிழந்ததாக அந்நாட்டுக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...