Main Menu

நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவத்தின் அடக்கு முறைக்குள்ளேயே வாழ்கின்றனர் – செல்வராணி

நாட்டில் தமிழ் மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்குமுறைக்குள்ளேயே வாழ்கின்றனர்  என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவியும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான தம்பிராசா செல்வராணி  தெரிவித்துள்ளார்.

யாழ் மட்டுவில்லில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு எற்படுத்தப்பட்ட கொடுமை தொடர்பில் கண்டனம் வெளியிடும் முகமாக  நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக அயைத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”அண்மையில் யாழ் மட்டுவில்லில் ஸ்ரீலங்கா பொலிசார் அத்துமீறி எமது உறவுகள் மீது நடத்திய கொடுமையான அநியாயமான செயல்களைச் செய்துள்ளார்கள். எமது உறவுகள் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் அடித்து, மிதித்து, தலைமுடிகளைப் பிய்த்துச் செய்த அந்தக் கொடுமையினை வடக்கு கழக்கு எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

எமது உறவுகள் அங்கு ஏன் சென்றார்கள். தற்போதைய பிரதமர்   முன்னாள் ஜனாதிபதியாக இருக்கும் போதே எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தமையால் அவரிடம் சென்று எங்கள் உறவுகள் எங்கே என்று கேட்பதற்காகவே சென்றிருந்தர்கள். வேறு எதற்கும் அவர்கள் அங்கே செல்லவில்லை.

அது மாத்திரமல்ல காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு என்பனவற்றின் சந்திப்புடன் ஏனைய நாட்டின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்காக எமது வவுனியா மாவட்டச் செயலாளர் ஜெனீவாவிற்குச் செல்ல இருந்த வேளையில் அவருக்கான வீசா மறுக்கப்பட்டது.

அதேநேரம் தெற்குப் பிரதேசத்தில் இருந்து அனைத்து உறவகளுக்கும் வீசா வழங்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்றிருந்தார்கள். எமது உறவுகளின் பிரச்சனைகளை நாங்கள் ஐநா முன்றலில் சென்ற கதைப்பதற்கு எங்களுக்கு எவ்வளவு தடைகளை விதித்திருந்தார்கள்.

இன்றும் வீதிகளில் நின்று நாங்கள் எங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதேநேரம் மட்டுவில்லில் எமது உறவுகளுக்கு நடந்த கொடுமையையும் இன்று ஐநா பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஐநா எங்களது விடயத்தில் பாராமுகமாகச் செயற்படுகின்றது. இலங்கை அரசின் சொல்லைக் கேட்டு எங்களை முன்நின்ற பார்க்;கவில்லை என்று எங்களுக்குத் தோணுகின்றது. நாற்பது ஆண்டுகாலமாக இராணுவக் கெடுபிடிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் இன்னும் அத்தகைய இராணுவக் கெடுபிடிக்குள்ளே தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  என்று தெரிவித்தார்.

பகிரவும்...