தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவ மனையில் அனுமதி
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு ஏற்பட்ட திடீர் முச்சுத் திணறல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...