சென்னை அருகே விரைவு ரயில் தடம் புரண்டது
தமிழ்நாட்டில் சென்னை அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டது குறித்து உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு (11 அக்டோபர்) எட்டரை மணியளவில் கவரப்பேட்டை நிலையத்தில் விபத்து நடந்தது.
நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா பாகமதி விரைவு ரயில் மோதியது.
அதன் 13 பெட்டிகள் தடம் புரண்டன.
2 பெட்டிகளில் தீப்பிடித்தது.
19 பயணிகள் காயமடைந்தனர்.
விரைவு ரயிலில் இருந்த பயணிகள் இன்று அதிகாலை வேறொரு சிறப்பு ரயிலில் உரிய இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
ரயில் தடத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்கின்றன.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...