Main Menu

எப்போது வாய் திறப்பாய் சம்பந்தா?

எல்லாம் அழிந்தும் இல்லாமல் போகாமல்
இன்னும் இருக்கின்றோம் என்றெண்ணி
பொல்லாதவன் நீயென பலபேர் பொங்கியபோதும்
இல்லாத வீட்டில் இலுப்பைபூ சர்க்கரையாம்

ஏதும் செய்யட்டும் சின்னன் எண்டாலும் ஏதோ செய்யட்டும்
இப்பிடித்தான் ஏழு வருசங்கள் இல்லாமல் போனதடா?

எல்லாம் வரும் எறும்பூர கற்குழியும்
மின்னாமல் முழங்காமல் பம்மிக்கொண்டிருந்தா
பாவப்பட்டு தருவாங்கள்
வல்லரசையே வளைச்சுப்போட்ட எங்களுக்கு
தமிழரசை மலரவைக்க தெரியாதோ?

இப்பிடித்தானே அந்த எடுபட்டு போனவனும் சொல்லிவந்தான்.
கனநீளா அவனையும் காணலையே.

அறுபது வருசமாக அரசியல் செய்தவனே
அழிஞ்சுபோன சனத்தையெண்டாலும் நினைச்சு பார்த்தனியே
எதிர்கட்சி தலைவர் எண்ட எருமை வாகனத்தை
எடுத்தவுடன் நினைச்சாயோ எல்லாம் வருமெண்டு

என்ன சொல்லுகிறாய் ஒற்றையாட்சிக்குள்ள இரட்டை ஆட்சியோ?
கையை கட்டெண்டு நீயே கண்மூடி குடுத்துட்டு
அவிட்டுவிடு எண்டால் சரி வருமே!

ஆஊ எண்டால் அப்பிடியே அப்பிக்கொண்டு போயிடுவான்
அதாலதான் அடித்தளம் அவசியம்
எத்தினை தரமடா கத்தி கத்தி சொல்லுகிறோம்

கன்னியா நீரூற்றை காவுகொடுத்தவனே
சாம்பல்தீவில் பெளத்த விகாரையடா
முல்லைத்தீவில் சிறிலங்கா பிரிகேடியருக்கு வீதியடா
மாதகலில அரசமரம் மறக்காம பெரிய புத்தகோயில்
இப்ப யாழ்ப்பாண கம்பசில கண்டி டான்சாம்
ஆமிக்காரன் தேரிழுக்க அடம்பிடிப்பாம்
எல்லாம் கனவாக போகிறதே கண்டாயோ?

கூப்பிடு தூரத்தில் இத்தனையும் நடக்கக்க
படிப்படியா வெல்லலாம் எண்டு சொல்லுறியாம்
உனக்கென்ன வருத்தமடா?

இருக்கக்கூட முடியாமல் இழுபட்டு போகிறாய்
இதெல்லாம் எதுக்காக அவ்வளவு அக்கறையோ?

ஒற்றையாட்சி எண்டால் உண்மையா தெரியாதோ?
சட்டம் படிச்ச உனக்கு அதின்ர சரிபிழை தெரியாதோ?

வாக்கு மாறினால் வாக்கு கேட்டு வந்திடாத
ஏமாந்த சனத்திற்கு உன்னைப்பற்றி தெரியாது
பனையால விழுந்த பாவப்பட்ட என் சனத்தை
பத்து தரம் ஏறி மிதிக்காதே!

நீ ஒண்டும் செய்யவேண்டாம்
கண்ணை திற. பொத்தின கையை திற.
உண்மையை பேசு. தமிழரின் நியாயத்தை சொல்லு.
முடியாதா? அதையாவது சொல்லு!

எங்கட சனம் பாவமடா? இனியாவது அவர்களை விட்டுவிடு!

பகிரவும்...