Main Menu

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன் குறித்து அரசிடம் பேசி வருகிறோம் – முரளீதரன்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்த ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உள்நாட்டு போரின்போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த கோரிக்கை வைத்து வருவது நன்றாக புரிகிறது.

இந்த நேரத்தில் இலங்கை அரசிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். நல்லிணக்க முயற்சியை முன்னெடுத்து செல்வதோடு அங்குள்ள தமிழ் சமூகம் மக்களின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இலங்கை உடனான இருதரப்பு பேச்சுகள் நடக்கும்போதெல்லாம் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பது உள்ளிட்ட அவர்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களை இலங்கை தரப்பிடம் வலியுறுத்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...