இரசாயன இயலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ஆம் ஆண்டின் இரசாயனவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு துறையில் சிறந்து சேவையாற்றி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சேவையில் மிகச்சிறந்த முறையில் பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விஞ்ஞானிகளான டேவிட் பேக்கர், ஜோன் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இம்முறை இரசாயனவியலுக்கான நோபல் பரிசினை பெற்றுள்ளனர்.
கணக்கீட்டுப் புரத வடிவமைப்பு மற்றும் புரத அமைப்பு கணிப்பு ஆகியவற்றுக்காக இந்த ஆண்டு குறித்த மூவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பகிரவும்...
