Main Menu

இந்திய மீட்புப் பணிக் குழுவினரும் நாட்டிற்கு வருகை

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதுடன் நான்கு மோப்ப நாய்களும் அழைத்து வரப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பகிரவும்...