இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிகள் போராட்டம்
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வயநாட்டில் வனவிலங்குகளால் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,இது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பிரியங்கா காந்தி இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்த பிரச்சினையைச் சரிசெய்ய மத்திய அரசும் மாநில அரசும் வயநாடு தொகுதிக்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
