Main Menu

இத்தாலியின் முன்னாள் பிரதமருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 83 வயதான சில்வியோ பெர்லஸ்க்கு கொவிட்-19 அறிகுறி தென்படவில்லை எனவும் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பெர்லுஸ்கோனியின் மருத்துவர் ஆல்பர்டோ ஜாங்க்ரிலோ தெரிவித்துள்ளார்.

சில்வியோ பெர்லஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் மிலானோவுக்கு அருகிலுள்ள அவரது வீட்டிலிருந்து தனது பணிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லஸ் சர்டினியா தீவுகளுக்கு சமீபத்தில் சுற்றுலா சென்றிருந்ததாகவும், அங்குதான் அவருக்கு கொரோனா பரவியிருக்கலாம் எனவும் அவரது மருத்துவ உதவியாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனி விரைவில் குணமடைய தீவிர வலதுசாரி லா லேகா கட்சியின் தலைவர் மேட்டியோ சால்வினி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரரான சில்வியோ பெர்லஸ் கோனி, கடந்த 1994ஆம் ஆண்டில் இத்தாலியின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து 4 முறை அந்நாட்டின் பிரதமராக செயற்பட்டுள்ளார்.

இவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டு உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து வருகிறார்.

பகிரவும்...