ஹொங்கொங் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – 16 பேர் காயம்

ஹொங்கொங்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுவர் ஒன்றுடன் மோதுண்டு நேற்று(திங்கட்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 67 வயதான, பேருந்தின் சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்து தொடர்பில் ஹொங்கொங் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !