ஹொங்கொங் சிக்சர்ஸ்- கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி
ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக மொஹமட் அக்லக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய லக்ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...