ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த தீப்பரவலின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீப்பரவல் காரணமாக விமான நிலையக் கட்டடங்களுக்கு அருகே கரும்புகை சூழ்ந்திருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, குறித்த தீப்பரவல் காரணமாக பிரித்தானியாவின் தேசிய ரயில் சேவையில் இரண்டு மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.