ஹவாய் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – 3 பேர் உயிரிழப்பு

அதன் பின் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டபோது 26-வது மாடியிலிருந்து மூன்று உடல்கள் தீயில் கருகி இறந்திருப்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் இவ்விபத்தில் காயம் அடைந்த 17-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பரவிய புகையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹொனோலுலு  தீயணைப்பு படையின் கேப்டன் டேவிட் ஜென்கின்ஸ் தெரிவித்தார்.

தீயணைப்பு படை வீரர்கள் ஒவ்வொரு மாடியில் உள்ள வீட்டிற்கும் சென்று அங்குள்ள மக்களை மீட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் பிடித்த தீயால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !