ஹரியினால் பிரிந்த மேகன் குடும்பம்?

இளவரசர் ஹரியின் செயற்பாடு காரணமாகவே தங்களது குடும்பத்திற்குள் பிளவு ஏற்பட்டதாக மேகனின் சகோதரி சமந்தா தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் ஹரியினை தற்போதைய சசெக்ஸ் சீமாட்டியான மேகன் திருமணம் செய்து கொண்டது முதல் மேகனிற்கும், அவரது தந்தைக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதுகுறித்து மேகனின் தந்தை கவலை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் மேகனின் சகோதரி சமந்தாவின் கருத்து தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகனுடன் தன்னுடைய முதல் கிறிஸ்துமஸ் தினத்தை கென்சிங்டன் அரண்மனையில் கொண்டாடினர். அப்போது தன்னுடைய காதலி குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர்.

அதில், மேகனுக்கு இதுவரை கிடைக்காத ஒரு குடும்பம் கிடைக்க போகிறது என கூறினார். ஹரியின் இந்த கருத்து தான் மேகனின் குடும்பம் பிரிவதற்கு காரணம் என அவருடைய சகோதரி சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சமந்தா, “ஹரி கூறிய அந்த வார்த்தை எங்களுடைய குடும்பத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

ஆனால் அதைப்பற்றி மேகன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஹரி அவருடைய குடும்பத்தை தவிர வேறு எந்த குடும்பத்தையும் பார்த்திருக்க மாட்டார்.

ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் உயர்தர குடும்பத்தை போன்று இருந்ததில்லை என்றாலும், நாங்களும் ஒரு குடும்பமாக தான் இருந்தோம்“ என தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !