ஹம்பர்க்கில் G20 மாநாட்டிற்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் G20 மாநாட்டிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் G20 மாநாடு நேற்று (07) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், துருக்கி ஜனாதிபதி தையீஃப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உட்பட உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் G20 மாநாட்டை ஆரம்பித்து வைத்தார்.

உலகத் தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, G20 மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் இலட்சக்கணக்கானோர் கறுப்பு உடையணிந்து ஹம்பர்க் நகரில் மாநாட்டுக்கு முதல் நாள் ஒன்று கூடினர்.

எதிர்ப்பு வாக்கியங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பொலிஸார் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், G20 மாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !