ஸ்ரார்ஸ்பேர்க் பயங்கரவாதி பயன்படுத்திய 19 ஆம் நூற்றாண்டு துப்பாக்கி

ஸ்ரார்ஸ்பேர்க்கில் நான்கு பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி Cherif Chekatt க்கு ஆயுதம் வழங்கிய இரு நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதி Cherif Chekatt, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரிவோல்வர் வகை துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை அதிரசியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதியை சுட்டுக்கொன்றிருந்தபோதே ஆறு குண்டுகள் அடங்கிய குறித்த துப்பாக்கியை மீட்டுள்ளனர். அவனிடம் மேலதிகமாக கத்தி ஒன்றும் 8mm குண்டுகள் கொண்ட கலிபர் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
ஆயுதங்கள் தொடர்பான வல்லுனர் Jean-Louis Courtois இது குறித்து தெரிவிக்கும் போது, <<குறித்த ஆயுதம் 1892 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது. d’armes de Saint -Etienne (Loire) ஆயுத தயாரிப்பாளர்களால் குறித்த ஆயுதம் தயாரிக்கப்பட்டது. 3,50,000 பிரதிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. முதலாம் உலக யுத்தத்தில் பிரெஞ்சு இராணு சிப்பாய்களால் பயன்படுத்தப்பட்டது இந்த துப்பாக்கி!>> என தெரிவித்தார். ஆனால் குறித்த ஆயுதம் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கியது எப்படி என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !