ஸ்ரார்ஸ்பேர்க் தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கிய ஐவர் கைது

ஸ்ரார்ஸ்பேர்க் நகர சந்தையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டும், 11 பேர் காயமடைந்தும் இருந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 11 ஆம் திகதி (2018) Cherif Chekatt எனும் பயங்கரவாதி தாக்குதல் நடத்தியிருந்தான். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் முன்னதாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தாக்குதலாளிக்கு ஆயுதங்கள் வழங்கிய ஐந்து நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை Alsace நகரில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐவரின் ஒருவர் 78 வயதுடையவர் என அறிய முடிகிறது. மீதமான நால்வரின் மூவர் 65, 34 மற்றும் 32 வயதுடைய ஆண்கள் எனவும், 57 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 8 mm கலிபர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருந்தது. 29 வயதுடைய Cherif Chekatt, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தான். பின்னர் 48 மணிநேரங்களுக்குள்ளாக அவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !