ஸ்மார்ட்போன்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து- ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஸ்மார்ட்போன்களையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 2014-ம் ஆண்டிற்குள் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘சுற்றுச்சுழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஸ்மார்ட்போன்கள். குறைந்த ஆற்றலில் பயன்படுத்துவதற்காக மிகவும் விலை அதிகமான அரிய உலோகங்களை ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றனர். போன்களில் உள்ள சிப், போர்ட் போன்றவை தயாரிக்கும் போது அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.

புதுப்புது ரக ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் மக்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை போனை மாற்றுகின்றனர். இதனால் போன்கள் வீணாக்கப்படுகின்றன. இக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன’ என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மெக்மாஸ்டர் பல்கலைகழக பேராசிரியர், ‘தகவல் தொழில்நுட்பத்திற்காக அதிக அளவிலான ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. தொலைத்தொடர்பு சாதனங்களை தயாரிக்கும் போது மாசு வெளியாகின்றது. தற்சமயம் 1.5 சதவீதம் மாசு வெளியாகிறது. 2040-ம் ஆண்டிற்குள் 14 சதவீதமாக உயரும். நாம் அனுப்பும் ஒவ்வொரு குறுச்செய்திக்கும், செல்போன் அழைப்பிற்கும் மற்றும் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யும் வீடியோவிற்கும் அதிக அளவு ஆற்றல் தேவைப்படுகிறது. பொதுவாக தகவல் மையங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை எரிபொருள் மூலம் பெறுகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது’ என கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !