ஸ்பெயின் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- 100 பேர் படுகாயம்!

ஸ்பெயினில் பார்சினோலாவின் வடமேற்கு பகுதியில் இரு ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை இவ்விபத்து சம்பவித்ததாக கடலோனியா பிராந்திய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் 26 வயதான ரயிலின் எஞ்சின் சாரதியே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் பிரதமர் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் வெளியிட்டுள்ளார். அத்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 50 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !