ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் நிலச்சரிவு – அவசரநிலை பிரகடனம்
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கோமேரா என்ற இடத்தில் சிறிய குன்றும் கடலும் இணைந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தனர்.
இதன்போது, குன்றில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தென்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட சில நிமிடங்களில் குன்றின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்துள்ளது.
மேலும் இதுபோன்ற நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு அவசரநிலையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.