ஸ்பெயினில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு 16 பேர் காயம்!

ஸ்பெயினில் இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வடகிழக்கு ஸ்பெயினிலுள்ள 10 மாடிக் கட்டடத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 5 மணித்தியால போராட்டத்தின் பின் தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !