ஸ்பெயினின் முன்னணி வீரரை எதிர்கொள்கிறார் சிட்சிபாஸ்

டென்னிஸ் தரவரிசையில் முன்னிலை பெறுவேன் என தனது பதின்மூன்றாவது வயதிலேயே சூளுரை விடுத்த கிரேக்க வீரர் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி போட்டி மெல்போர்ன் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் சிட்சிபாஸ் நடாலை எதிர்கொள்கிறார்.

காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியோபோவை எதிர்கொண்ட நடால், 6-3, 6-4, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு சம்பியன் ஃபெடரரை தனது 20ஆவது வயதில் வீழ்த்திய சிட்சிபாசுடனான இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 2012ஆம் ஆண்டில் தனது 13ஆவது வயதில் சிட்சிபாஸ் வெட்கத்துடன் ஊடகங்களை சந்தித்த காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதில், தான் மூன்றாவது வயதில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்ததாகவும், ரொஜர் ஃபெடரரை முன்மாதிரியாகக் கொண்டு விளையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், சில ஆண்டுகளில் டென்னிஸ் தரவரிசையில் முன்னிலை பெறுவேன் என்றும் உறுதியாக தெரிவித்திருந்தார்.

அன்று அவர் கூறியதை நிஜமாக்கும் வகையில் தற்போது விளையாடிவரும் சிட்சிபாஸ், அவுஸ்ரேலிய ஓபனில் நடப்பு சம்பியன் ஃபெடரெரை 7-6, 7-6, 7-5, 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !