ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்
21 வயதான ஸ்பானிஷ் கால்பந்துப் பயிற்சியாளர் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மாலகாவைத் தளமாகக் கொண்ட அற்லெரிகோ போர்ட்வா ஆல்ராவின் (Atletico Portada Alta) இளைஞர் அணியின் பயிற்சியாளரான பிரான்சிஸ்கோ கார்சியா கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்ற பின்னர் அவருக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
ஸ்பானிஷ் பத்திரிகை மாலகா ஹோய் (Malaga Hoy) செய்தியின்படி கார்சியா சுவாசிக்கச் சிரமப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியா இரண்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது.
அத்துடன் அவருக்கு லூகேமியா இருப்பதாகவும் கூறப்பட்டது. வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் அவரது லூகேமியா அபாயத்தின் அளவு அதிகரித்தது.
லூகேமியாவால் பாதிக்கப்படாவிட்டால், அவர் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து தப்பித்திருப்பார் என்று தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி independent.co.uk