ஸ்ட்ராஸ்பேர்க் தாக்குதல்தாரியின் விபரம் வெளியீடு!

பிரான்ஸ் – ஸ்ட்ராஸ்பேர்க் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தொடர்பாக விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

செரிஃப் சி என்ற 29 வயதான குறித்த சந்தேகநபர், பிரான்ஸில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்தோடு, அவரது ஒளிப்படம் ஒன்றையும் டுவிட்டரில் பொலிஸார் பதிவிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதோடு, ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவரை கண்டுபிடிக்க சுமார் 600 பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, 2 ஹெலிகொப்டர்களும் தேடுதல் பணியில் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்ட்ராஸ்பேர்க் நகரின் மிகப்பெரிய கிறிஸ்மஸ் சந்தையில்  நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் சுமார் மூவர் உயிரிழந்தனர். 12 பேர்வரை காயமடைந்ததோடு, அவர்களில் அறுவர் தீவிர காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என பிரான்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !