ஸ்ட்ரஸ்பேர்க் தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

பிரான்ஸ் ஸ்ட்ரஸ்பேர்க் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த பார்டோ பெட்ரோ ஒரென்ட் (வயது-36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஐந்து தினங்களாக கோமாவில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார். இத்துடன் உயிரிழப்பு ஐந்தாக அதிகரித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ட்ரஸ்பேர்க் நகரிலுள்ள மிகப்பெரிய சந்தையான கிறிஸ்மஸ் சந்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அன்றைய தினமே மூவர் உயிரிழந்ததோடு, 12 பேர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில், இரண்டு நாட்களின் பின்னர் தாக்குதல்தாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தாக்குதலில் காயமடைந்த இத்தாலி ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

கிறிஸ்மஸ் விடுமுறையை கழிப்பதற்காக பிரான்ஸிற்கு வந்தவர்களே இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நால்வர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, ஸ்ட்ரஸ்பேர்க் நகரில் நேற்று ஆராதனை நிகழ்வொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !