ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக – முதலமைச்சர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதென முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “ஆலையை மூடுவதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்குவதில் அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்விடயத்தில் தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என கூறினார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !