ஸ்டெர்லைட் ஆலையை திறக்கமுடியாது! – உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் தொடர்பான மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்புவழங்கிய உச்சநீதிமன்றம் தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாதென தடை விதித்துள்ளது.

தூத்துக்குடிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய, உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதன்போது ஆயிரக்கணக்கண மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டு ஆலை மூடப்பட்டது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !