பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு ஸ்கொட்லாந் மக்களிடம் வேண்டுகோள்

ஸ்கொட்லாந்தில் சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்புகின்றபோதிலும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஸ்கொட்லாந்து, வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துகளில் இடையூறு ஏற்பட்டதுடன், பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

தற்போது சீரற்ற காலநிலை வழமைக்குத் திரும்புகின்றது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதாகவும், பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

மேலும், ஸ்கொட்லாந்தில் மூடப்பட்ட பாடசாலைகளில் பெரும்பாலானவை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், 19 கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக, ஸ்கொட்லாந்து கவுன்ஸில் தெரிவித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !