ஸ்கார்பரோவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்!

ஸ்கார்பரோ பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிஞ்ச் அவென்யூ மற்றும் பிர்ச்மவுன் சாலைக்கு அருகிலுள்ள கிளெண்டுவர் சர்க்யூட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பிற்கு வெளியே ஒருவர் சண்டை போவுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் பொலிஸார் அங்கு சென்றபோது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் இருப்பதை கண்ட அவர்கள், அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !