வைத்திய சாலைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு
வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் இந்த நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும் இதுவரையில் அவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமையின் அடிப்படையில், வெளிப்படையான முறையில் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தொடர்ந்தும் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.