வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி அரைநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

கொழும்பில் கூடிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டத்தைக் கண்டிக்கும் முகமாகவே எதிர்வரும் 22 ஆம் திகதி அரைநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் 30 க்கும் அதிகமான தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் குதித்திருந்தது.

இதனால் நாட்டில் வைத்திய சேவை மற்றும் போக்குவரத்துச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்த நிலையிலேயே மீண்டும் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறித்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !