வேல்ஸில் 16 வயது முதல் வாக்களிக்க அனுமதி!

வேல்ஸில் நடைபெறும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில், 16 வயது முதல் 17 வயதிலிருந்து  வாக்களிக்கும் உரிமையை இளம் சமுதாயத்தினருக்கு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக, வேல்ஸ் தொழிற்கட்சி அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், இளம் சமூகத்தினர் வாக்களிக்கும் வகையில், வாக்களிக்கும் வயதைக் குறைக்க வேல்ஸ் அரசாங்கம் விரும்புகின்றது. இந்நிலையில், 16 வயது முதல் 17 வயதுவரையானவர்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், வேல்ஸ் தொழிற்கட்சி அரசாங்கம் கூறியுள்ளது.



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !