வேலை நிறுத்தம்! – இன்று பரிசில் ஆர்ப்பாட்டம்
இன்று வியாழக்கிழமை பரிசில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது. Place de la République இல் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாக உள்ளது. 13:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டம் கார்-து-நோர் நிலையம் வழியாக place Saint-Augustin வரை செல்ல உள்ளனர். கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இடம்பெற்றிருந்த ஆர்ப்பாட்டத்தில் 350,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக தொழிற்சங்கம் அறிவித்திருந்த நிலையில், மீண்டும் அதே அளவு பேரினை திரட்ட தாம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.