வேலூர் மத்திய சிறையில் சோதனை

வேலூர் மத்திய சிறையில் இன்று (சனிக்கிழமை) காலை திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறையிலுள்ள கைதிகள், தொலைபேசி பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே திடீர் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதில் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 50 பொலிஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சமூகத்தில் பல குற்றங்களை செய்தமையால் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகள், ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றமை குறித்து, காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள பெரும்பாலான சிறைச்சாலையில் அடிக்கடி திடீர் சோதனை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !