வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் தீ விபத்து – மூவர் உயிரிழப்பு
வேலூர் அருகே பட்டாசு விற்பனை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரன்கள் இருவருமே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
காட்பாடியை அடுத்த லத்தேரியில் பேருந்து நிலையம் அருகே மோகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு விற்பனை மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தின்போது மோகனின் பேரன்கள் தனுஷ், தேஜஸ் ஆகியோர் உள்ளே இருந்ததால் அவர்களை வெளியே அழைத்து வர மோகன் உள்ளே சென்றுள்ளார்.
இதன்போது பட்டாசு அனைத்தும் வெடித்துச் சிதறியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த விபத்துக் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பகிரவும்...