வெள்ளை மாளிகையில் கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவில் ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தம்பதியர் திறந்து வைத்தனர்.

அந்நாட்டு மரபுப்படி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் சார்பில் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் நிறுவப்படும்.

இதன் அடிப்படையில், 96 ஆம் ஆண்டாக இந்த ஆண்டு பச்சை வண்ண ஒளி விளக்குகள் நிறைந்த பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிறிஸ்மஸ் மரத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் ஒன்றாக திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் மக்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !