வெளிநாட்டவருக்கு அதிக ஊதியம் வழங்கும் சுவிஸ்!

சுவிட்சர்லாந்தின் Zurich மற்றும் Geneva நகரங்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து பணி புரிவோருக்கு அதிக ஊதியம் வழங்கும் நகரங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
HSBC நடத்திய ஆய்வொன்றில் விலைவாசி அதிகம் உடைய நாடானாலும் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளி நாட்டவர்கள் தாங்கள் இங்கு வந்ததிலிருந்து தங்கள் ஊதியம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Zurichஇலுள்ள 77 சதவிகிதம் பேரும் Genevaஇலுள்ள 65 சதவிகிதம் பேரும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
சொந்த நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு சென்று வாழ்க்கை நடத்துவோருக்கு expats என்று பெயர்.
HSBC நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிக ஊதியம் ஊதியம் பெறும் expats மும்பை மற்றும் San Franciscoவில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
மும்பையில் வாழும் expats 217,165 டொலர்களும் San Franciscoவில் வாழும் expats $207,227 டொலர்களும் ஊதியமாக பெறுகின்றனர். இந்தத் தொகை, வரிகள் பிடித்தம் போக கையில் கிடைக்கும் தொகையாகும்.
ஊதியம் அதிகம் பெறும் expats தர வரிசையில் ஆசியா முன்னணியில் இருக்கிறது. நான்கு ஆசிய நாடுகள் expats ஊதியங்களில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.
HSBC நடத்திய இந்த ஆய்வில் 159 நாடுகளின் expats ஊதியங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வு கடந்த பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !