Main Menu

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், வெலிகந்த காந்தகாடு மத்திய நிலையம் ஆகியன கண்காணிக்கும் மத்திய நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளன.

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர்களை குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் தங்கவைக்கும் செயற்பாடு இன்று முதல் முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வருகைத்தரும் சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...