வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு பின்னர் விமான நிலையத்திற்கு அனைத்து பயணிகள் விமானங்களையும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு இலங்கைக்கு வரவிருந்த அனைத்து விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு புறப்பட்டுச் சென்ற 891 பயணிகளை இரண்டு விசேட விமானங்கள் மூலம் விரைவாக இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைக்கு வரும் அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்சவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...