வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதேபோல், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதேபோல், தனக்கு வாழ்த்து தெரிவித்த உலக தலைவர்களுக்கும் பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.